கம்பராமாயணம் 5589 · சுந்தர 8.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேவும் வெம்சினத்து அரக்கர்கள் - போருக்கு வந்த கொடிய கோபம் கொண்ட அரக்கர்கள்; முறை முறை விசையால் ஏவும் பல்படை - பல தடவை விசையுடன் தூண்டிய பல்வகை ஆயுதங்கள்; எத்தனை கோடிகள் எனினும் - மிகப் பலகோடிகளானாலும்; புண்களும் - அவற்றால் உண்டாகின்ற புண்களும், தூவும் தேவரும் - இன்பத்தையே அனுபவிக்கின்ற தேவர்களும்; மகளிரும் முனிவரும் சொரிந்த பூவும் - அவரது மனைவிமார்களும் தேவ ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து பொழிந்த மலர்களும்; மாருதி புயத்தில் தெரிந்தில - அனுமனது தோளில் வேற்றுமை தெரியாதபடி ஒரு சேர விளங்கின.
காண்பவர்களுக்குப் புண்களின் வடுக்களும் மலர்களும் வேற்றுமை தெரிந்தில. அனுமனுக்கு அமரர்கள் தூவிய பூக்களைப் போலவே, அரக்கர்கள் விட்ட படைகளால் ஏற்பட்ட புண்ணும் ஊறு செய்தில என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- However many crores of weapons the rākṣasas, come in fierce rage,
- hurled at him with force, wave after wave,
- the flowers that the gods, their women and the sages showered down,
- and the wounds — on Māruti's shoulders the two could not be told apart.
What the poem says
As the rākṣasas pelt Aṉumaṉ with weapons by the crore, the gods, their wives and the sages shower flowers on him from the sky in praise.
On his shoulders the red wounds and the flowers look alike, so that no one can tell which is which. The point is that the weapons hurt him no more than the flowers did.