கம்பராமாயணம் 5593 · சுந்தர 8.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விரைவின் உற்றனர் - இராவணன் முன்னே விரைவாகப் போய்ச் சேர்ந்த அவர்கள்; விம்மல் உற்று - ஏங்கிய வண்ணமாய்; யாது ஒன்றும் விளம்பார் - யாதொன்றையும் (வாயினால்) சொல்ல மாட்டாமல், பட்டதும் - அங்கு நேர்ந்த எல்லாவற்றையும்; கரதலத்தினால் கட்டுரைக்கின்றார் - தங்கள் கைகளின் சைகைகளால் குறிப்பித்துக் காட்டி; தரையில் நிற்கிலர் - தரையில் நிற்க மாட்டாமல்; திசை தொறும் நோக்கினர் சலிப்பார் - நான்கு திக்குகளையும் பார்த்து நடுங்கினார்கள்; அரசன் அவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் - அரக்கர் அரசனான இராவணன், அவர்கள் படுகின்ற வருத்தமே (அங்கு நேர்ந்த படுதோல்வியைத்) தெரிவிக்க உணர்ந்தான்.
கரதலத்தினால் கட்டுரைக்கின்றார் என்றது. அங்கு நடந்த அக்கிங்கரர் அழிவைச் சொல்ல அச்சத்தால் நாவெழாததைக் காட்டுகின்றது. சொல்லாடாமல் மெய்ப்பாடுகளாலேயே செய்தி உணர்த்தும் சாதனையைச் செய்யுளிலும் செய்துகாட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They arrived in haste, sobbing, unable to utter a single word,
- telling what had happened only by gestures of their hands;
- they could not keep their feet on the ground, but looked every way and shook;
- and the king understood from their very distress what it had to tell.
What the poem says
The guards reach Irāvaṇaṉ but are too terrified to speak. Choking with sobs, they can only gesture with their hands, they cannot stand still, and they keep glancing round as if Aṉumaṉ might appear.
Irāvaṇaṉ grasps the disaster from their state alone. The poet conveys the news entirely through body language, without a word of report.