கம்பராமாயணம் 5595 · சுந்தர 8.58

Section சுந்தர காண்டம் / 8. கிங்கரர் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் அலந்திலர் - (அதற்கு, வந்த காவலர்கள்) சினம் மிக்குக் கொண்டவர்களாகிய அந்தக் கிங்கரர்கள் வருந்தி ஓடினார் அல்லர்; செருக்களத்து அஞ்சினார் அல்லர் - போர்க்களத்தில் பயந்து ஓடினார்களும் அல்லர்; புலம் தெரி பொய்க்கரி புகலும் புன்கணார் குலங்களின் - அறிவுக்குப் பொய் என்று தெரிந்தும் பொய்ச்சாட்சி சொல்லும் இழிந்த அற்பர்களுடைய குலங்கள் போல; குரங்கினால் அவிந்தனர் என்றார் - அந்தக் குரங்கினால் போரில் அழிந்து ஒழிந்தனர் என்று கூறினார்.

“புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார் குலங்கள் ஒழிதல்” - உவமை. ஒழுக்கத்தை வற்புறுத்துவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'They, being men possessed by fury, did not falter;
  2. they were not afraid on the field of battle;
  3. yet like the clans of base men who bear false witness though they know the truth,
  4. they were wiped out — by a monkey!' they said.

What the poem says

The guards answer Irāvaṇaṉ's questions. The Kiṅkarar did not flinch or run away; they fought furiously. But the monkey destroyed them utterly.

The simile carries a moral: the Kiṅkarar perished root and branch, as the whole family line of a perjurer is said to perish — someone who knowingly gives false testimony.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"calam talaikkoṇṭaṉar āya taṉmaiyār
alantilar cerukkaḷattu añciṉār alar:
pulam teri poyk kari pukalum puṉkaṇār
kulaṅkaḷiṉ avintaṉar kuraṅkiṉāl!"eṉṟār.