கம்பராமாயணம் 5599 · சுந்தர 9.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூம்பினகையன் - குவித்து வணங்கிய கைகளை உடையவனாய்; நின்றகுன்று என குவவு திண்தோள் - தனக்கு அருகில் நின்ற மலைபோல் திரண்ட வலிய தோள்களையும்; பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா - பாம்பை ஒத்த அஞ்சாமையையும் கொண்ட சம்புமாலி என்னும் அரக்கனைப் பார்த்து; வாம் பரித் தானையோடு வளைத்து - தாவிச் செல்லும் குதிரைப் படைகளோடு சென்று அந்தக் குரங்கை வளைத்து; அதன் மறனை மாற்றி - அதன் வலிமையை அடக்கி; தாம்பினின் பற்றி தந்து - கயிற்றினால் கட்டி என்னிடம் கொண்டு வந்து விட்டு; என் மனம் சினம் - என் மனத்தில் உள்ள கோபத்தை; தணித்தி என்றான் - ஆற்றுவாய் என்று இராவணன் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Looking at the one called Campumāli, who stood with palms joined in reverence,
- with massive strong shoulders like a hill and the fierce daring of a serpent,
- he said, 'Surround it with your army of bounding horses, crush its strength,
- bind it with ropes and bring it to me, and so cool the anger in my heart.'
What the poem says
A new canto begins: the slaying of Campumāli. Irāvaṇaṉ turns to Campumāli, a rākṣasa with mountain-like shoulders and a serpent's fearlessness, who stands before him with hands folded in respect.
He orders him to take his cavalry, surround the monkey, subdue it, tie it up and bring it to him, so that the king's anger may be appeased.