கம்பராமாயணம் 5600 · சுந்தர 9.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயவன் வணங்கி - அந்தச் சம்புமாலி என்பவன் இராவணனை வணங்கி; ஐய ! - தலைவனே; அளப்பு அரும் அரக்கர் முன்னர் - அளவிடுதற்கு அரிய அரக்கர் கூட்டத்திடையே; நினைவின் எண்ணி - மனத்தில் ஆலோசித்துப் பார்த்து; நேர்ந்தனை - நான் சொல்லுவதற்கு இசைந்து, நீ இது முடித்தி என்று ஏயினை - (அவர்களை ஏவாமல் என்னை நோக்கி) நீ இக்காரியத்தைச் செய்து முடிப்பாயாக என்று ஆணையிட்டாய்; என்னப் பெற்றால் - என்னும் பெருமையை யான் அடையப் பெற்றேன் என்றால்; என்னின் உயர்ந்தார் - என்னைவிட உயர்ந்தவர்; யார் என்னா - வேறு யார் உளர் என்று சொல்லி; இலங்கை வேந்தன் போர்ச்சினம் போவது ஒப்பான் போயினன் - இலங்கை அரசனான இராவணனது, போரில் மூண்டு எழும் கோபமே, ஒரு உருவெடுத்துப் போவது போன்று சென்றான்.
“மாருதி அல்லனாகில் நீயெனும் மாற்றம் பெற்றேன்; ஆர் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான்” (6986) என்னும் பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. விரைவுக்கு இராவணன் கொள்ளும் போர்ச்சினம் உவமை; புதுமை சான்ற கற்பனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He bowed and said, 'Lord, before the countless rākṣasas
- you weighed it in your mind, chose me,
- and commanded, ‘You shall accomplish this!’ — since I have won that, who stands higher than I?'
- and off he went, like the war-fury of Ilaṅkai's king itself going forth.
What the poem says
Campumāli bows and replies with pride. Out of all the innumerable rākṣasas, the king has thought it over and picked him alone for this task; no honour could be greater.
He sets out at once, so swiftly and so fiercely that he seems to be Irāvaṇaṉ's own battle-rage taking bodily form and marching off.