கம்பராமாயணம் 5602 · சுந்தர 9.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உரும் ஒத்த முழக்கின் - இடி போன்ற பிளிறலையும்; செங்கண், வெள்ளெயிறு - சிவந்த கண்களையும் வெண்மையான தந்தங்களையும்; ஓடை நெற்றி - முகபடாம் அணிந்த நெற்றியையும் உடைய, கிரியின் தோன்றும் - மலைபோலத் தோன்றுகின்ற; பருமித்த வேழமும் - பெருமிதம் கொண்ட யானைகளும்; பதுமத்து அண்ணல் நிருமித்த - தாமரை மலரில் வாழ்கின்ற பிரம்மதேவன் படைத்த; எழிலி முற்றிற்று என்னல் ஆம் நிலைய - மேகங்கள் ஒருங்கே முடிவாக வந்துள்ளன என்று சொல்லத்தக்க நிலைமையையும்; நேமி - சக்கரங்களையும்; சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி - சொரிகின்ற முத்துமாலைகள் சூழப் பெற்ற வெண்ணிறத் துகில் கொடிகளையும் உடைய; தடம் தேர் சுற்ற - பெரிய தேர்களும் தன்னைச் சூழ்ந்து வரவும்.
'குழூவ' என அடுத்த கவியோடு தொடரும் குளகச் செய்யுள். இது முதல் ஆறு கவிகள் ஒரு தொடர்
முழக்கினையும், செங்கண்ணையும், வெள்ளெயிற்றினையும், நெற்றியினையும் உடைய வேழம். நிலைய தேர் நேமித் தேர் கொடித் தேர் தடந்தேர் எனத் தனித்தனி கூட்ட வேண்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Around him went elephants with thunderous trumpeting, red eyes, white tusks and caparisoned brows,
- proud as mountains, and great chariots with wheels,
- so massive one could say that all the clouds the Lord of the lotus had created were gathered there,
- and with white cloth banners hung round with dripping strings of pearls.
What the poem says
This verse begins a run of six that describe Campumāli's army; the sentence continues into the following verses.
Here are the elephants — trumpeting like thunder, red-eyed, white-tusked, their foreheads covered with ornamental plates, looming like hills — and the huge chariots, so many and so dark that it looks as if every cloud Brahmā ever made had gathered in one place, flying white banners fringed with pearls.