கம்பராமாயணம் 5604 · சுந்தர 9.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோமரம் உலக்கை கூர்வாள் - பெரிய தண்டாயுதம், உலக்கை, கூர்மையான வாளாயுதம்; சுடர்மழு, குலிசம் - ஒளி வீசுகின்ற எரியிரும்புப் படை, வச்சிராயுதம்; தோட்டி - அங்குசம்; அரம் தின்ற கூர்வேல் - அரத்தினால் அராவிக் கூராக்கப்பட்ட வேலாயுதங்கள்; தழல் ஒளி வட்டம் - நெருப்பின் சுவாலையை உடைய சக்கரம்; சாபம் - வில்; காமர்தண்டு - அழகிய தண்டாயுதம்; எழுக்கள் - இரும்புத் தண்டுகள்; காந்தும் கப்பணம் - ஒளி விடுகின்ற இரும்பு நெருஞ்சி முட்படைகள்; காலபாசம் - யமனுக்கு உரிய கயிற்றின் வடிவான ஆயுதங்கள்; மாமரம், வலயம் - பெரிய மரங்கள், வளையங்கள்; வெம்கோல் - கொடிய அம்புகள்; முதலிய வயங்க - முதலிய ஆயுதங்கள் விளங்கவும்.
'திசைதொறும் செறிவ செல்ல' என அடுத்த கவியோடு தொடரும். தாம், மாது, ஓ அடைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lances, pestles, keen swords, gleaming axes, thunderbolts, goads,
- spears honed sharp on the file, discuses blazing with flame, bows,
- handsome maces, iron bars, glinting spiked caltrops, nooses of Death,
- great trees, rings and cruel arrows and the like all flashing —
What the poem says
Another list of the weapons carried by Campumāli's army: lances, pestles, swords, battle-axes, thunderbolt-weapons, elephant goads, spears filed to a point, flaming discuses, bows, maces, iron rods, spiked caltrops, nooses like Death's own, whole trees, metal rings and arrows.
The sentence runs on into the next verse.