கம்பராமாயணம் 5605 · சுந்தர 9.7

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எத்திய அயில், வேல், குந்தம், எழுமுதல் இனைய ஏந்திக்
குத்திய திளைப்ப, மீதில் குழுவின மழை மாக் கொண்டல்
பொத்து உகு பொருவு இல் நல் நீர் சொரிவன போவ போலச்
சித்திரப் பதாகை ஈட்டம் திசை தொறும் செறிவ செல்ல.

பொருள் · Meaning in Tamil

எத்திய அயில் வேல் குந்தம் - தாக்கி எறியப்பட்ட கூர்மையான வேல்கள் எறியீட்டிகள்; எழு, கழு முதல ஏந்தி - இரும்புத்தடிகள் கழுக்கள் முதலிய ஆயுதங்களைத் தரித்து; குத்திய திளைப்ப - குத்தித் திளைப்பதால்; மீதில் குழுவின மழை - மேலே கூடியிருந்த மழையை; மாக்கொண்டல் - பொழியக்கூடிய பெரும் இருண்ட மேகங்கள்; பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவபோல - குத்தப்பட்டுச் சிந்தும் ஒப்பில்லாத நல்ல நீரைச் சொரிவனவாய்ச் செல்வன போல; சித்திரப் பதாகை ஈட்டம் - அழகுள்ள கொடிகளின் கூட்டம்; திசைதொறும் செறிவ செல்ல - எல்லாத் திக்குகளிலும் நெருங்கப் பெற்றனவாய்ச் செல்லவும்.

'பல்லியம் துவைப்ப' என அடுத்த கவியோடு தொடரும். 'எற்றிய' என்பது படைகள் ஏந்திச் சென்ற மிகுதியான கொடிகள் அசைந்து செல்லும் காட்சி உயர்வு நவிற்சியாகப் புனையப்பட்டுள்ளது. வீரர்களின் படைக்கலங்கள் குத்திக் குடைந்ததால் மேகங்கள் சொரிந்த நீர்ப்பொழிவுபோல அந்தக் கொடிகள் விளங்கினவாம். படைக்கலங்களின் மிகுதியும் நீட்டமும் குறிக்கப்பட்டன. மேகங்கள் சொரிவனபோல் கொடிகள் சொரிந்தன என்பதும் மிகுதி குறித்த கற்பனை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bearing thrusting spears, lances, javelins, iron bars, stakes and the like,
  2. which stabbed and churned so that the great dark rain-clouds massed above,
  3. pierced through, went pouring out their peerless pure water — so
  4. the hosts of painted banners went crowding into every quarter.

What the poem says

The army's weapons are so many and so tall that they seem to stab the clouds overhead. The countless bright banners streaming from the host look like the rain gushing out of those punctured clouds.

The exaggeration conveys the sheer number and height of the weapons and flags. The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ettiya ayil, vēl, kuntam, eḻu kaḻu mutala ēnti
kuttiya tiḷaippa, mītil kuḻuviṉa maḻai māk koṇṭal
pottu uku poruvu il nal nīr corivaṉa pōva pōla
cittirap patākai īṭṭam ticai toṟum ceṟiva cella.