கம்பராமாயணம் 5606 · சுந்தர 9.8

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பல் இயம் துவைப்ப - பலவகை வாத்தியங்கள் ஒலிக்கவும்; நல்மாப் பணிலங்கள் முரல - அழகிய பெரிய சங்குகள் முழங்கவும்; பொன் தேர்ச்சில்லிகள் இடிப்ப - பொன் மயமான தேரின் சக்கரங்கள் (வேகமாக உருள்வதால்) ஒலியை உண்டாக்கவும்; வாசி சிரித்திட - குதிரைகள் சிரிப்பன போலக் கனைக்கவும்; செறி பொன்தாரும் வில்லும் நின்று இசைப்ப - அடர்ந்த பொன்னால் அமைந்த கிண்கிணி மாலைகளும் வில்லும் நிலையாக நின்று ஒலிக்கவும்; யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப - யானைகள் பெருமுழக்கத்தை உண்டாக்கிப் பிளிறவும்; விண் தோய் ஒல் ஒலி - (இவ்வாறு தோன்றி) ஆகாயத்தில் சென்ற ஒல் என்னும் ஒலிகள்; வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க - வானில் உள்ள தேவர்கள் பேசும் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள முடியாதபடி நீக்கி விடவும்.

'அன்னவன் சேனை செல்ல' என அடுத்த கவியைத் தொடரும். ஒல் என்றது ஒலிக்குறிப்பு மன், ஓ. ஈற்றசைகள்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As many instruments sounded, fine great conches blared, the wheels of golden chariots
  2. thundered, horses neighed as if laughing, the thick golden bell-garlands
  3. and the bows kept ringing, and the elephants loosed their trumpeting roar,
  4. the din that rose to touch the sky drowned out the words of the gods in heaven.

What the poem says

The noise of Campumāli's march: drums and other instruments, conches, the rumble of golden chariot wheels, the whinnying of horses (likened to laughter), the jingling of golden bells and twanging bows, and the trumpeting of elephants.

The roar rises so high that the gods in heaven cannot hear one another speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1palliyam tuvaippa, nal māp paṇilaṅkaḷ murala, poṉ tērc
cillikaḷ iṭippa, vāci cirittiṭac ceṟi poṉ tārum,
villum niṉṟu icaippa, yāṉai muḻakkam viṭṭu ārppa, viṇ tōy
ol oli vāṉil tēvar urai terivu oḻikkum maṉṉō.