கம்பராமாயணம் 5607 · சுந்தர 9.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவன் சேனை செல்ல - அந்தச் சம்புமாலியினது படைகள் செல்வதால்; ஆர்கலி இலங்கை - கடலால் சூழப்பட்ட இலங்கை; ஆய பொன் நகர் - என்ற பொன்னால் அமைந்த நகரமானது; தகர்ந்து, பொங்கி - உடை பட்டு, மிகவும் நிறைந்து; ஆர்த்து எழு தூளி போர்ப்ப - கிளம்புகின்ற புழுதி, (தம் மீது) படிதலால்; மின் நகு கிரிகள் யாவும் - ஒளி விளங்குகின்ற சாதாரண மலைகளெல்லாம்; மேருவின் விளங்கி தோன்ற - பொன்மயமான மேரு மலை போலப் பேரொளி கொண்டு விளங்க; தொல் நகர், பிறவும் எல்லாம் - பழைய அந்த இலங்கை நகரும் மற்றைய நகரங்களும்; துறக்கம் என்னப் பொலிந்தன - பொன்னுலகமான சுவர்க்கலோகம் போல விளங்கின.
நகுதல் - விளங்குதல். உரும் ஒத்த என்ற பாடல் முதல் இதுவரை வந்த வினையெச்சங்கள் இச்செய்யுளில் வரும் “பொலிந்தன” என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the bright-gleaming hills shone out like Mēru,
- and the ancient city and all the others glowed like heaven,
- as his army marched and, from the sea-girt golden city of Ilaṅkai,
- pounded to pieces and swelling up, the dust rose roaring and covered them.
What the poem says
As the army tramps through Ilaṅkai, its feet grind the golden city into dust. This golden dust billows up and settles on the surrounding hills and towns, so that ordinary hills glitter like golden Mount Mēru and the cities shine like the golden world of the gods.
This verse completes the long sentence that began six verses earlier.