கம்பராமாயணம் 5608 · சுந்தர 9.10

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்று எனச் சென்ற சேனை - கொடியவனான சம்புமாலியினது பெரிய தேரைச் சூழ்ந்து விரைவாகச் சென்ற அரக்கர் படையில்; ஆழி அம் தடம் தேர் - சக்கரங்களை உடைய அழகிய பெரிய தேர்கள்; ஐந்தொடு ஐந்து ஆயிரம் ஆம் - பத்தாயிரமாகும்; ஏயின யானை - அங்குப் பொருந்திய யானைகளின் அளவு; அத்தேர்க்கு இரட்டி - அத் தேர்த் தொகைக்கு இரட்டிப்புள்ளதாகும்; (இருபதினாயிரம்) பாய் மா - பாயும் குதிரைகள்; யானையின் இரட்டி - யானைத் தொகையினும் இரு மடங்காகும்; (நாற்பதினாயிரம்) போயின பதாதி - சென்ற காலாட் படை; சொன்ன புரவியின் இரட்டி - கீழே கூறப்பட்ட குதிரைத் தொகையினும் இரு மடங்காகும் (எண்பதினாயிரம்). போல், ஆம் - அசைகள். இது சேனையின் தொகுதி கூறியது. நால்வகைப் படைகளையும் இப்பாடலில் தொகுத்துச் சொல்லிய கவிஞர் இனி அவற்றைத் தனித்தனியே விவரிப்பார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Chariots with fine wheels numbered five and five thousand; to those chariots
  2. the elephants were matched at twice as many; the leaping horses twice the elephants;
  3. the foot-soldiers who went were twice the horses just named —
  4. such was the army that went swiftly round the wicked one's great chariot.

What the poem says

The poet now gives the size of Campumāli's army in its four traditional divisions: ten thousand chariots, twenty thousand elephants, forty thousand horses and eighty thousand foot-soldiers, all surrounding his great chariot.

Having given the totals, the following verses describe each division in turn.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram aintoṭu aintu ām āḻi am taṭan tēr, at tērkku
ēyiṉa iraṭṭi yāṉai, yāṉaiyiṉ iraṭṭi pāy mā,
pōyiṉa patāti coṉṉa puraviyiṉ iraṭṭi pōlām,
tīyavaṉ taṭan tēr cuṟṟit teṟṟeṉac ceṉṟa cēṉai.