கம்பராமாயணம் 5609 · சுந்தர 9.11

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடுந்தேர் ஆட்கள் - விரைந்து செல்லும் தேர் வீரர்கள்; வில் மறைக் கிழவர் - தனுர் வேதத்துக்கு உரியவர்கள்; நானா விஞ்சையர் - பல விதமான மாய வித்தையில் வல்லவர்கள்; வரத்தின் மிக்கார் - பெற்ற வரங்களால் சிறந்தவர்கள்; வன் மற கண்ணர் - வலிய வீரத்தைக் காட்டும் கண்களை உடையவர்கள்; வரம்பு இலா ஆற்றல் வயிரத் தோளார் - எல்லையற்ற வலிமை வாய்ந்த உறுதியான தோள்களை உடையவர்கள்; தொல் மறக் குலத்தார் - பழமையான வீரக் குடியில் பிறந்தவர்கள்; தூணி தூக்கிய புறத்தர் - அம்பறாத் தூணி கட்டிய முதுகை உடையவர்கள்; மார்பின் கல் மறைத்து ஒளிரும் - மார்பாகிய மலையை மறைத்து விளங்குகின்ற, செம் பொன் கவசத்தர் - சிவந்த பொன்னாலான கவசங்களைப் பூண்டவர்கள்.

கிழமை - உரிமை. இது தேர் வீரர் திறம் கூறியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Masters of the Veda of archery, skilled in many sorceries, mighty in boons,
  2. with eyes of fierce valour, with diamond-hard shoulders of boundless strength,
  3. of ancient warrior clans, with quivers slung across their backs,
  4. in armour of red gold gleaming over their rock-like chests — such were the warriors of the swift chariots.

What the poem says

First the chariot-fighters: experts in the science of archery, adept in many kinds of magic, strengthened by boons from the gods, with fierce eyes and shoulders hard as diamond.

They come of old warrior families, carry quivers on their backs, and wear red-gold armour covering chests as broad and hard as rock.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil maṟaik kiḻavar, nāṉā viñcaiyar, varattiṉ mikkār,
val maṟak kaṇṇar, āṟṟal varampu ilā vayirat tōḷār,
tol maṟak kulattar, tūṇi tūkkiya puṟattar, mārpiṉ
kal maṟaittu oḷirum cem poṉ kavacattar, kaṭun tēr āṭkaḷ.