கம்பராமாயணம் 5610 · சுந்தர 9.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மதம்படு களிற்றின் பாகர் - மதநீர் தோன்றுகின்ற ஆண் யானைகளைச் செலுத்தும் போர் வீரர்கள்; பொரு திசை யானை ஊரும் புனிதனைப் பொருவும் பொற்பர் - போர் செய்யும் தன்மையுள்ள (கிழக்குத்) திக்கின் யானையாகிய ஐராவதத்தைச் செலுத்துகின்ற பரிசுத்தனான இந்திரனை ஒத்த அழகுடையவர்கள்; சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத் தொழிலும் தொக்கார் - வாட்படைத் தொழிலிலும் மற்றும் அங்குசம் கொண்டு யானையைச் செலுத்திப் போர் செய்யும் தொழிலிலும் சேர்ந்து தேர்ந்தவர்கள்; நிருதியின் பிறந்த வீரர் - நிருதி என்னும் தென் மேற்கு திசையின் காவல் தெய்வமாகிய பெண்ணின் வழியில் பிறந்தவர்கள்; நெருப்பு இடை பொழியும் கண்ணர் - நெருப்பை இடை இடையே பொழியும் கண்களை உடையவர்கள்; பரிதியின் பொலியும் மெய்யர் - சூரியனைப் போன்று ஒளிவிட்டு விளங்கும் உடலை உடையவர்கள்.
நிருதி என்ற பெண், தென் மேற்குத் திசைக்குக் காவல் தெய்வம். அவள் வழியில் தோன்றினமையால் நிருதர் எனப்பட்டனர் அரக்கர்களில் இவர்கள் ஒரு வகையினர். இது, யானை வீரர் திறம் கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Handsome as the holy one who rides the warring elephant of the quarter,
- practised both in the arts of combat and in the craft of the goad,
- heroes born of Nirṛti, with eyes that spread fire,
- with bodies shining like the sun — such were the drivers of the rutting tuskers.
What the poem says
Next the elephant-riders. They look as splendid as Indra riding his elephant Airāvata, guardian of the eastern quarter. They are skilled both in weapons and in steering elephants with the goad.
They are descended from Nirṛti, the goddess of the south-west, which is why rākṣasas are called nirutar; their eyes flash fire and their bodies shine like the sun.