கம்பராமாயணம் 5612 · சுந்தர 9.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில் இடும் எயிற்று வீரன் - ஒளி வீசுகின்ற கோரைப் பற்களை உடைய வீரனான சம்புமாலி; அந் நெடுந்தானை சுற்ற - அவ்வாறான பெரிய சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; அமரரை அச்சம் சுற்ற - தேவர்களைப் பயம் சூழ்ந்து கொள்ளவும்; தன் நெடுங் கண்கள் காந்த - தன் பெரிய கண்கள் கோபத்தால் ஒளி வீசவும்; மார்பில் தாழ் பெரும் கவசம் மின்னிட வெயிலும் வீச - மார்பில் தங்கிய பெரிய கவசம் ஒளிவிட்டு மின்னலிடம் தோன்றும் ஒளிபோன்று பிரகாசிக்கவும்; பொருப்பிடை நெருப்பின் பொங்கி - மலையிடையே உள்ள நெருப்பு போல சினங்கொண்டு; பொன் நெடும் தேரில் போனான் - பொன் மயமான பெரிய தேரில் ஏறிச் சென்றான்.
சம்புமாலியால் அனுமனுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயத்தால், அமரரை அச்சம் சுற்றியது. பொருப்பினிடையிலுள்ள நெருப்பு, தேரின் நடுவில் சினம் கொண்டு தங்கியிருந்த சம்புமாலிக்கு உவமை ஆயிற்று. “வீரன், தானை சுற்றத் தேரில் போனான்” என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With that great army surrounding him and fear surrounding the gods,
- he went in his tall golden chariot, seething like fire among the mountains,
- his long eyes blazing, the great armour hanging on his chest
- flashing like lightning and casting a glare like sunlight — the hero whose fangs gleamed.
What the poem says
Campumāli rides out in his tall golden chariot at the centre of his army, his eyes burning with anger and his armour flashing.
The gods watching are seized with fear, worried that he might harm Aṉumaṉ. Raging in the middle of his chariot, he is like a fire blazing in the midst of mountains.