கம்பராமாயணம் 5613 · சுந்தர 9.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நந்தன வனத்துள் நின்ற நாயகன் தூதன் தானும் - (அந்தச் சமயத்தில்) அசோக வனம் என்ற சிங்காரத் தோட்டத்துள் தனித்து நின்ற இராமபிரான் தூதனான அனுமனும்; அரக்கர் வந்திலர் என்னும் மனத்தினன் - மேலும் அரக்கர்கள் தன்னுடன் போரிட வரவில்லையே என்ற எண்ணுடையவனாகி; வழியை நோக்கி - அவர்கள் வரும் வழியை எதிர் நோக்கிக் கொண்டு; சந்திரன் முதல - சந்திரன் முதலவாகிய கிரகங்களும்; வான மீன் எலாம் தழுவ நின்ற - ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாமும் சூழ்ந்திருக்க விளங்கிய; இந்திர தனுவில் தோன்றும் - இந்திர வில் என்னும் வானவில்லைப் போன்று தோன்றிய, தோரணம் இவர்ந்து நின்றான் - அங்கிருந்த தோரண வாயில் மீது ஏறி நின்றான்.
இத் தோரண வாயில், இராவணன், இந்திரனைப் போரில் புறங்கண்ட போது, அவனது அமராவதியில் இருந்ததைக் கவர்ந்து, அசோகவனத்தின் வாயிலாகக் கொண்டு வந்து வைத்ததாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Lord's envoy, standing in the pleasure-grove,
- thinking, 'The rākṣasas have not come,' kept watching the road,
- and climbed up and stood upon the arched gateway that looked like Intiraṉ's bow
- with the moon and all the stars of the sky clustered about it.
What the poem says
Meanwhile Aṉumaṉ, Irāmaṉ's messenger, waits in the ruined grove, impatient because no more rākṣasas have come to fight. He climbs onto the arched gateway of the grove to watch for them.
The arch, jewelled like a rainbow set among the moon and stars, had been carried off by Irāvaṇaṉ from Amarāvatī, Indra's capital, when he defeated Indra, and set up here as the entrance to the grove.