கம்பராமாயணம் 5614 · சுந்தர 9.16

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கேழ் இரும் மணியும், பொன்னும், விசும்பு இருள் கிழித்து வீங்க,
ஊழ் இரும் கதிர்கேளாடும் தோரணத்து உம்பர் மேலான்,
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி,
ஆழியின் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான்.

பொருள் · Meaning in Tamil

கேழ் இருமணியும் பொன்னும் - நல்ல நிறமுள்ள பெரிய இரத்தினங்களும், பொன்னும்; விசும்பு இருள் கிழித்து நீங்க - வானில் உள்ள இருளைப் பிளந்து நீங்கிட; ஊழ் இருங்கதிர்களோடும் - முறை முறையே தோன்றுகின்ற (இரத்தினம், பொன்) மிக்க கிரணங்களோடும் கூடிய; தோரணத்து உம்பர் மேலான் - அத்தோரண வாயிலின் மேல் ஏறி நின்ற அனுமன்; சூழ் இருங்கதிர்கள் எல்லாம் தோற்றிட - தன்னைச் சூழ்ந்த பெருங் கிரணங்கள் யாவும் தோன்றி விளங்க; ஆழியின் நடுவண் தோன்றும் - கடலின் நடுவில் விளங்குகின்ற; சுடரும் சோதி அருக்கனே அனையன் ஆனான் - விளங்குகின்ற பேரொளியை உடைய சூரியனை ஒத்தவன் ஆனான்.

தோரணத்து உம்பர் மேலான் (அனுமன்) அருக்கன் (சூரியன்) அனையன் ஆனான். தோரணத்துக்குக் கடலும், மேலிடத்திருந்த அனுமனுக்குச் சூரியனும் உவமையாயின. தோரணம் - தோரண வாயில். அனுமனுக்குக் கதிரவனை முன்னும் (4768) உவமையாக்கினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As its bright great gems and gold tore the darkness of the sky away,
  2. he who stood on top of the gateway with its rows of mighty rays
  3. was like the sun, blazing with light,
  4. rising in the midst of the sea with all its great rays shown around it.

What the poem says

The jewels and gold of the gateway shoot out rays of light that drive away the darkness of the sky. Aṉumaṉ, standing on top of it, looks like the sun rising out of the middle of the ocean surrounded by its beams.

The glittering arch is the sea; Aṉumaṉ is the rising sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kēḻ iru maṇiyum, poṉṉum, vicumpu iruḷ kiḻittu nīṅka,
ūḻ iruṅ katirkēḷāṭum tōraṇattu umpar mēlāṉ,
cūḻ iruṅ katirkaḷ ellām tōṟṟiṭac cuṭarum cōti,
āḻiyiṉ naṭuvaṇ tōṉṟum arukkaṉē aṉaiyaṉ āṉāṉ.