கம்பராமாயணம் 5615 · சுந்தர 9.17

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேகம் செல்லொடு சிந்த - மேகங்கள் இடியுடன் சிதறி விழவும், திரைக் கடல் சிலைப்பு தீர - அலைகளை உடைய கடல் தன் பேரொலி அடங்கிப் போகவும், கல் அளைக் கிடந்த நாகம் - மலைப் பொந்துகளில் தங்கிக் கிடந்த பாம்புகள்; உயிரொடு விடமும் கால - தமது உயிரோடு நஞ்சையும் ஒன்று சேர்ந்து உமிழவும்; கொல் இயல் அரக்கர் நெஞ்சில் அச்சம் குடிபுக - பிறரைக் கொல்லும் தன்மையுள்ள அரக்கர்களது மனத்தில் பயம் வந்து புகுந்து நிலையாக நிற்கவும்; விண்ணோர் நடுக்கு உற - தேவர்கள் நடுக்கம் அடையவும்; வீரன் வில் என இடிக்க - ரகுவீரனான இராமபிரானது வில்லின் நாணொலி போல முழங்க; வீரன் ஆர்த்தான் - சிறந்த வீரனான அனுமன் கர்ச்சனை செய்தான்.

செல் - இடி; 'வான் முழக்குச் செல்' (பரிபாடல் 13.44)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the clouds broke apart with their thunder, the wave-tossed sea's roar was stilled,
  2. the snakes lying in the rock-crevices spat out their venom together with their lives,
  3. fear moved in and made its home in the hearts of the murderous rākṣasas,
  4. and the gods trembled — the hero roared, thundering like the bow of the Hero.

What the poem says

Seeing the army approach, Aṉumaṉ gives a war-cry like the twang of Irāmaṉ's bowstring. It shatters the thunder-clouds, silences the roaring sea, and makes snakes in their holes spit out their venom and die.

Fear settles permanently in the hearts of the rākṣasas, and even the gods shake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1celloṭu mēkam cinta, tiraik kaṭal cilaipput tīra,
kal aḷaik kiṭanta nākam uyiroṭu viṭamum kāla,
kol iyal arakkar neñcil kuṭi puka accam, vīraṉ
vil eṉa iṭikka, viṇṇōr naṭukkuṟa vīraṉ ārttāṉ.