கம்பராமாயணம் 5616 · சுந்தர 9.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திசைக்கண் நின்றன வேழம் - எட்டுத் திசைகளிலும் நின்றவையான திக்கு யானைகள்; நெடும் களிச் செருக்கு நீங்க - (தமது) மதக் களிப்பு நீங்கவும்; தென் திசை நமனும் - தெற்குத் திக்குப் பாலகனாகிய யமனும், துணுக்கு என உள்ளம் சிந்த - திடுக்கிட்டு மனம் சிதறவும்; வானில் பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர - ஆகாயத்தில் அழிவு பெறாத நட்சத்திரங்கள் யாவும் மலர்களைப் போலக் கீழே உதிர்ந்து விழவும்; பூவும் குன்றமும் பிளக்க - பூமியும் (அதன் மேலுள்ள) மலைகளும் பிளந்து போகவும்; வேலை துளக்குற தோள் கொட்டினான் - (அனுமன் தனது) தோளைத் தட்டினான்.
பூ - பூமி; மீன் - நட்சத்திரங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the elephants standing at the quarters lost their great rutting pride,
- Death of the southern quarter felt his heart jolt and scatter,
- all the undying stars of the sky dropped down like flowers,
- the earth and the mountains split and the sea was shaken — he slapped his shoulders.
What the poem says
Aṉumaṉ slaps his shoulders in challenge, the traditional gesture of a warrior inviting combat. The sound is so tremendous that the elephants of the eight directions lose their rut, Yama, lord of death and guardian of the south, is startled, the stars fall like flowers, the earth and its mountains crack, and the ocean heaves.