கம்பராமாயணம் 5617 · சுந்தர 9.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ்வழி - அப்போது; அரக்கர் எல்லாம் - போருக்குச் சென்ற அரக்கர்கள் யாவரும்; அலை நெடும் கடலின் ஆர்த்தார் - அலைகளை உடைய பெரிய கடல் போல ஆரவாரித்து; பிணப் பெருங்குன்றம் தெற்றி - பெரிய பிணமலைகள் கிடந்து போகவொட்டாது தடுத்தலாலும்; வெவ் வழி குருதி வெள்ளம் புடைமிடைந்து உயர்ந்து வீங்க - வெம்மையுடனே பெருகுகின்ற இரத்தப் பெருக்கு (போகும் இடங்களில் எல்லாம்) நெருங்கி மிக்குப் பெருகுவதாலும்; தமர் உடம்பு இடறி வீழ்வார் - தமது சுற்றத்தவர்களுடைய பிணங்களின் மேல் இடறி வீழ்கின்றவராய்; செவ் வழி சேறல் ஆற்றார் - (அனுமன் உள்ள இடத்துக்கு) நேரான வழியில் செல்ல முடியாதவர்களாய்; எவ்வழிச் சேறும் என்றார் - எந்த வழியாகப் போய்ச் சேருவோம் என்று செல்லும் வழி தெரியாது திகைத்து நின்றார்கள். செவ்வழி - நேர் வழி; தெற்றுதல் - தடுத்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then all the rākṣasas roared like the long-waved sea;
- but they could not go by the straight road, for the great mountains of corpses blocked them,
- and hot floods of blood crowded and swelled high on every side;
- stumbling over the bodies of their own kin and falling, they cried, 'Which way can we go?'
What the poem says
Campumāli's army roars back, but cannot reach Aṉumaṉ. The path is blocked by the mountains of Kiṅkarar corpses and by the rising floods of warm blood.
Tripping over the bodies of their own relatives and falling, the rākṣasas stand bewildered, asking each other how they are to get through.