கம்பராமாயணம் 5618 · சுந்தர 9.20

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கன் ஆண்டு நின்று - சம்புமாலி அங்கிருந்து; அனிகம் தன்னை - தனது சேனையை; வெவ்வேறு அணி வகுத்து - வெவ்வேறு அணியாகப் பிரித்து; இரு புடையும் முன்னும் முறை மூண்டு முடுக ஏவி - அனுமனது இரண்டு பக்கங்களிலும் எதிரிலும் முறைமுறையாக மூண்டு விரையும் படி ஆணையிட்டு; தானும் திண் தேர் தூண்டினன் - தானும் தனது வலிய தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்; தோரணத்து இருந்த தோன்றல் - (அப்போது) தோரணத்தின் மீது அமர்ந்திருந்த அனுமன்; வேண்டியது எதிர்ந்தான் என்ன - தான் விரும்பியது தன்முன் எதிர்ப்பட்டது என்று; விசயத் திண்தோள் வீங்கினன் - தனது வெற்றி தரும் வலிய தோள்கள் பூரிக்கப்பெற்றான்.

சம்புமாலி சேனையை அணி வகுத்துக் கொண்டு தேரில் வருவதைப் பார்த்து, நாம் நினைத்தது வந்தது என்று அனுமன் மகிழ்ந்தான். அரக்கர் போருக்கு வரவில்லையே என்று எதிர்பார்த்து இருந்ததை 5564 ஆம் செய்யுளில் கூறினார். விசயம் - வெற்றி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From there the rākṣasa ranged his host in separate formations,
  2. ordered them to close in and press forward, rank after rank, on both flanks and in front,
  3. and drove on his own strong chariot; and the noble one seated on the gateway,
  4. as though the very thing he wished for had come to meet him, swelled his strong, victorious shoulders.

What the poem says

Campumāli organises his army into divisions and orders them to attack Aṉumaṉ from both sides and from the front, while he himself drives forward in his chariot.

Aṉumaṉ, sitting on the gateway, is delighted: the battle he had been waiting for has come to him, and his shoulders swell with eagerness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu niṉṟu arakkaṉ vevvēṟu aṇi vakuttu, aṉikam taṉṉai
mūṇṭu iru puṭaiyum muṉṉum muṟai muṟai muṭuka ēvi
tūṇṭiṉaṉ, tāṉum tiṇ tēr; tōraṇattu irunta tōṉṟal
vēṇṭiyatu etirntāṉ eṉṉa vīṅkiṉaṉ vicayat tiṇ tōḷ.