கம்பராமாயணம் 5620 · சுந்தர 9.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செயிர்கொள் வாள் அரக்கர் - பகைமை கொண்ட வாளேந்திய அரக்கர்கள்; சீற்றம் செருக்கினர் - சினத்தால் பெருமிதம் கொண்டவர்களாய்; வயிர்கள் வால் வளைகள் விம்ம - கொம்புகளும் வெண்மையான சங்குகளும் முழங்கவும்; வரிசிலை சிலைப்ப - கட்டமைந்த விற்கள் நாணொலியை உண்டாக்கவும்; மாயப் பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப - மாயவினைகளை விளைவிக்கும் பயிர்கள் போன்ற அரக்கர்கள் (மகிழ்ச்சி கொண்டு) ஆரவாரம் செய்யவும்; மூரிப் பல் இயம் குமுற - பெரிய பல வாத்தியங்கள் முழங்கவும்; படைகள் பற்றி - ஆயுதங்களைத் தமது கைகளினால் எடுத்து; வெயில்கள் போல் ஒளிகள் வீச - வெயில்களைப் போலப் பல ஒளிகள் வீசும்படி; வீரன் மேல் கடிது சிந்தி விட்டார் - அனுமன் மீது விரைவாக நாற்புறமும் சிதறும்படி விட்டார்கள்.
அரக்கர் செருக்கினராய், விம்ம, சிலைப்ப, ஆர்ப்பெடுப்ப, குமுற, படைகள் ஒளி வீச வீரன் மேல் விட்டனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- With horns and white conches blaring, banded bows twanging,
- the brood of sorcery raising a roar and the mighty drums thundering,
- the hostile sword-bearing rākṣasas, swollen with rage, seized their weapons and, scattering them
- so that they flashed like sunlight, loosed them swiftly at the hero.
What the poem says
Battle is joined. To the blare of horns and conches, the twang of bowstrings, the war-cries of the rākṣasas — 'crops' that yield only sorcery — and the booming of great drums, Campumāli's warriors hurl their weapons at Aṉumaṉ from all sides, flashing like sunbeams.