கம்பராமாயணம் 5627 · சுந்தர 9.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலைந்தார் - அனுமனோடு போர் செய்த அரக்கர்களில் (சிலர்); வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் - அனுமனது திறத்தைக் கண்டு அச்சம் கொண்டு வியந்தவண்ணம் கீழே விழுந்தனர்; எழுந்தார் - விழுந்தவர்களில் சிலர் எழுந்தார்; மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் - மருண்டும் மயங்கியும் குப்புற விழுந்து இறந்தனர்; பிழைத்தார் உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் - (அவ்வாறு இறவாமல்) உயிர் பிழைத்தவர்களில் சிலர் உருண்டு, வருந்தி உடல் துவண்டு; சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் - தமது உறுப்புக்கள் சுருளப் பெற்று, பூமியில் புரண்டு வலிகெட்டு ஓடிவிட்டனர்
இது, காலாட்படையின் அழிவு கூறியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They took fright, they marvelled, they fell, they rose;
- they were dazed, they swooned, they toppled, they died;
- they rolled, they writhed, they struggled, they survived;
- they curled up, they tossed about, they were routed — those who fought him.
What the poem says
The fourth division, the foot-soldiers, is dealt with in a verse made entirely of verbs. Terrified and amazed by Aṉumaṉ, they fall; some get up again, only to grow confused, faint, topple and die.
The few who survive roll on the ground in pain, curl up, writhe, and finally flee, their strength gone.