கம்பராமாயணம் 5628 · சுந்தர 9.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கரி கொடு கரிகளை களம்படப் புடைத்தான் - (அனுமன்) யானைகளைக் கொண்டே, யானைகளைப் போர்க்களத்தில் இறந்து விழும்படி அடித்துக் கொன்றான்; பரி கொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் - குதிரைகளைக் கொண்டே குதிரைகளைத் தரையில் வீழ்த்தி அழித்தான்; வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் - கட்டமைந்த வில்லை உடைய வீரர்களை அவ்வீரரில் சிலரை எடுத்து விட்டெறிந்து அழித்தான்; நிரை மணித் தேர்களை தேர்களின் நெரித்தான் - வரிசையாக மணிகள் கட்டிய தேர்களை (அவ்வாறான) தேர்களைக் கொண்டே அழித்துக் குவித்தான்.
இது, நால்வகைச் சேனைகளையும் அவ்வச் சேனைகளையே தன் போர்க் கருவியாகக் கொண்டு அனுமன் அழித்ததைக் கூறுவது. வெவ்வேறு வினைமுற்றுகள் கொண்டு, அழித்தலாகிய ஒரு முடியைக் காட்டிய நயம் உணரத்தக்கது. மேலும், செயலின் கொடுமையை வினைமுற்றுகளின் வல்லோசை குறிப்பாகப் புலப்படுத்தியதும் காணத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With elephants he battered elephants until they lay dead on the field;
- with horses he laid horses low upon the ground;
- with warriors he felled the warriors of banded bows;
- with chariots he crushed the rows of jewelled chariots.
What the poem says
Aṉumaṉ uses each division of the army as a weapon against itself. He picks up elephants and beats elephants to death with them, flings horses at horses, hurls archers at archers, and smashes chariots with chariots.
Each line uses a different verb for the same act of destruction, and the hard consonants of those verbs echo the violence.