கம்பராமாயணம் 5629 · சுந்தர 9.31

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூளையும் உதிரமும் - (அரக்கர்களது) மூளைகளும் இரத்தமும்; முழங்கு இரும் குழம்பு ஆம் - கொதிக்கின்ற பெரிய குழம்பு போலாகி, மீள் இரும் குழை பட - (கண்டவர் அஞ்சி) மீள்கின்ற மிக்க குழை சேறாய் விட; கரி விழுந்து அழுந்த - அச்சேற்றில் யானைகள் விழுந்து அழுந்தி இறந்து போக, தாளொடும் தலை உக - கால்களும் தலைகளும் சிந்திவிழ; தட நெடும் கிரி போல் நிருதரை - பெரிய நீண்ட மலைகளைப் போன்ற அரக்கர்களை; தோளொடும் வாளொடும் துகைத்தான் - தோள்களோடும், (அவர் கையில் கொண்ட) வாளுடனும் (அனுமன் தனது கால்களால்) துகைத்து அழித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As brains and blood became a thick and seething paste,
  2. a deep mire that sent men back in horror, and the elephants fell and sank into it,
  3. so that legs and heads went spilling, the rākṣasas, huge as tall mountains,
  4. he trampled down — shoulders, swords and all.

What the poem says

The brains and blood of the dead form a boiling sludge so deep and foul that onlookers recoil from it, and elephants that fall into it sink and drown.

Aṉumaṉ tramples the mountain-sized rākṣasas underfoot, arms and swords and all, scattering their heads and legs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūḷaiyum utiramum muḻaṅku iruṅ kuḻampu āy
mīḷ iruṅ kuḻaipaṭak kari viḻuntu aḻunta
tāḷoṭum talai uka taṭa neṭuṅ kiripōl
tōḷoṭum nirutarai vāḷoṭum tukaittāṉ.