கம்பராமாயணம் 5636 · சுந்தர 9.38

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கறுத்து எழு மனத்தினர் - கோபித்து எழுகின்ற மனத்தை உடையவர்களும், எயிற்றினர் - கோரப் பற்களை உடையவர்களும்; கயிற்றார் - பாசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டவர்களும்; செறுத்து எரி விழிப்பவர் - பகைத்து நெருப்புப் போல விழிப்பவர்களும்; சிகைக் கழு வலத்தார் - கூரிய கழு என்னும் படை வலிமை உடையவர்களும்; இவர் மறுத்து எழு மறலிகள் என அதிர்ந்தார் - இவர்கள் பகைமை பாராட்டிக் கிளம்புகின்ற யமன்களே என்னும்படி பெரு முழக்கம் செய்பவர்களுமான அரக்க வீரரை; ஒறுத்து - கடிந்து; உருத்திரன் என - உருத்திர மூர்த்தியைப் போல; தனித் தனி உதைத்தான் - அனுமனும் ஒவ்வொருவராக உதைத்துக் கொன்றான்.

மார்க்கண்டேயர் பொருட்டு, சிவபிரான் யமனைத் தன் திருவடியால் உதைத்து அழித்ததைக் குறிக்கொண்டு, அனுமன், உருத்திரன் எனப்பட்டான். கயிறு - பாசப் படை; சிகைக்கழு - நுனி கூரிய கழுப்படை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Black-hued and rising in wrath, fanged, carrying nooses,
  2. glaring fire in their hatred, mighty with sharp-tipped stakes,
  3. they roared as if they were so many Deaths risen up in defiance;
  4. he punished them and, like Uruttiraṉ, kicked them to death one by one.

What the poem says

Some rākṣasas look exactly like Yama, the god of death: dark, fanged, carrying nooses and sharpened stakes, glaring like fire. They come at Aṉumaṉ roaring like a whole troop of death-gods.

He kicks each of them to death, and so is likened to Rudra (Śiva), who kicked Yama to death to save the young devotee Mārkaṇḍēya.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟuttu eḻu niṟattiṉar eyiṟṟiṉar kayiṟṟār
ceṟuttu eri viḻippavar cikaik kaḻu valattār
maṟuttu eḻu maṟalikaḷ ivar eṉa atirntār;
oṟuttu uruttiraṉ eṉa taṉit taṉi utaittāṉ.