கம்பராமாயணம் 5638 · சுந்தர 9.40

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுபட எழுந்த தலைகள் - (அனுமன் வீசிய) எழு என்னும் ஆயுதம் பட்டதனால் (உடலை விட்டு வேறாக) எழுந்தனவான அரக்கர்களின் தலைகள்; விசும்பினை எட்டின - ஆகாயத்தை அளாவினவும்; மலைகளை முட்டின - மலைகளின் மீது மோதியனவும்; திசையை முயங்கின - திக்குகளைத் தழுவியனவும், ஒன்றை ஒன்று ஒட்டின - ஒன்றோடு ஒன்று சேர்ந்தனவுமாகி; ஊடு அடித்து உதைந்து - போர்க்களத்தில் அடிபட்டுத் தள்ளப்பட்டு; தலையொடு தட்டு முட்டு ஆடின - (முன்னமே போர்க்களத்தில்) விழுந்து கிடந்த தலைகளோடு தட்டு முட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some reached the sky, flying up as the iron bar struck them;
  2. some butted against the mountains; some embraced the far directions;
  3. some stuck one to another; battered and kicked about in the press,
  4. the heads jostled and knocked against the heads already there.

What the poem says

When Aṉumaṉ's iron bar strikes, the rākṣasas' heads are knocked clean off and fly in every direction: some up to the sky, some into the hills, some to the ends of the earth.

Others land on the field and are kicked about among the heads already lying there, knocking against them like odds and ends of household clutter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭiṉa vicumpiṉai eḻup paṭa eḻunta
muṭṭiṉa malaikaḷai muyaṅkiṉa ticaiyai
oṭṭiṉa oṉṟai oṉṟu ūṭu aṭittu utaintu
taṭṭu muṭṭu āṭiṉa talaiyoṭu talaikaḷ.