கம்பராமாயணம் 5640 · சுந்தர 9.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் - காற்றினும் விரைந்து செல்வனவான, கடிவாளம் பூட்டிய குதிரை வீரர்களான அரக்கர்கள்; களத்து உக்கார் - போர்க்களத்தில் மாண்டார்கள்; குருதி ஆற்று நிணத்தோடு அடுத்த - இரத்த ஆற்றில் கொழுப்புகளோடு சேர்ந்த; அள்ளல் பெருங் கொள்ளைச் சேற்றில் - நெருங்கிய மிகப் பெரிய சேற்றில், செல்லாத தேரின் ஆழி - ஆழும் போக முடியாத, தேரினது சக்கரங்கள் அமிழ்ந்து போகும்; நிலை தேரா - அப்படிப் புதைகின்ற தன்மையை உணர்ந்தும், வீற்றுச் செல்லும் - (அவ்விடத்தைவிட்டு) தனிமையோடு செல்லக் கூடிய; வெளியோ இல்லை - வெற்றிடமோ இல்லை (இவ்வாறு இருக்கவும்); விரைகின்றான் - போருக்கு அந்தச் சம்புமாலி விரைந்து செல்பவனானான்; அளியன் - இவன் மிகவும் இரங்கத்தக்கவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasa horsemen on bridled steeds swifter than the wind lay fallen on the field;
- in the great heaped mire of the river of blood mixed with fat
- the wheels of his chariot, unable to move, sink down; though he saw how things stood,
- there was no open ground to drive off on his own — yet the poor wretch pressed on.
What the poem says
Even Campumāli's swift cavalry has fallen. His chariot wheels sink in the swamp of blood and fat, and there is no clear ground left on which he could drive away.
He can see his situation, yet he still pushes forward to fight. The poet calls him aḷiyaṉ, 'pitiable', because he is rushing to his death.