கம்பராமாயணம் 5642 · சுந்தர 9.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உன் கருணை நன்று நன்று என்னா - (சம்புமாலி அனுமனை நோக்கி) நீ என் மீது காட்டும் இரக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி; நெருப்பு நக நக்கான் - நெருப்புப் பெருகி வரச் சிரித்து; எனைப் பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் என்னா - என்னைப் போரில் இறப்பவருள் ஒருவன் என்று எளிதாக நினைத்தாய் போலும் என்று கூறி; வன் திண் சிலையின் வயிரக் காலால் - மிக வலிய தன் வில்லின் வயிரம் போன்று உறுதியான தண்டினால்; வடிதிண் சுடர் வாளி - கூர்மைவாய்ந்த வலிய ஒளி வீசும் அம்புகளை; ஒன்று பத்து, நூறு நூறாயிரமும் - ஒன்றும், பத்தும், நூறும் நூறாயிரமும் என்ற கணக்குப் படி; உதைப்பித்தான் - (அனுமன் மீது) செலுத்தினான். நன்று நன்று; அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. நகுதல் - பெருகுதல் என்னும் கருத்தில் வந்தது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி உதைத்தல் - வலிந்து செலுத்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Fine, fine, this mercy of yours!' he said, and laughed so that fire blazed forth;
- 'You seem to take me for one of those who die!' he said,
- and from the diamond-hard limbs of his strong, sturdy bow, keen, strong, gleaming arrows —
- one, ten, a hundred, a hundred thousand — he sent driving at him.
What the poem says
Campumāli scorns the offer. 'How very kind!' he sneers, laughing with flames bursting from his mouth, and asks whether Aṉumaṉ takes him for one of the weaklings who get killed.
He bends his mighty bow and lets fly at Aṉumaṉ one arrow, then ten, then a hundred, then a hundred thousand. The repeated 'fine, fine' is mocking.