கம்பராமாயணம் 5643 · சுந்தர 9.45

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயன் - சிறந்தோனான அனுமன்; சிலை கைக் கொண்டால் - நீ வில்லைக் கையில் கொண்டால், வெறும் கை திரிவோரை - ஆயுதம் இன்றி வெறும் கைகளோடு திரிகின்றவர்களை; நொய்தின் வெல்வது அரிதோ என்னா - எளிதில் வெல்வது அரிய செயலாகுமா ? என்று சொல்லி; முறுவல் உக நக்கான் - பற்கள் வெளியில் தோன்றுமாறு சிரித்து; எய்த எய்த பகழி எல்லாம் - சம்புமாலி மேன் மேலும் தூண்டிய அம்புகள் அனைத்தையும்; காலால் அழியும் மழை என்ன - காற்றினால் சிதறி அழியும் மழைத்தாரைகள் போல; எழுவால் - தன் கையில் கொண்ட எழு என்னும் ஆயுதத்தால்; அங்கும் இங்கும் - எல்லாப் புறங்களிலும்; அகல்வித்தான் - நழுவிச் சிதறிப் போகுமாறு நீக்குவித்தான்.

செய்தி செய்தி; அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. எய்த எய்த; அடுக்கு விரைவுப் பொருளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go on, go on! When one has a bow in hand, is it so hard
  2. to beat with ease those who go about empty-handed?' he said, and laughed till his smile broke out;
  3. and the lord, as rain is scattered here and there by the wind,
  4. drove off with his iron bar every arrow that was shot at him.

What the poem says

Aṉumaṉ laughs at Campumāli's boast. It is no great feat, he mocks, for an archer to beat someone with no weapon in his hands.

Then, as fast as the arrows come, he knocks them aside in all directions with his iron bar, like rain blown away by the wind. 'Go on, go on' is said in derision; 'shot and shot' conveys the rapid fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ceyti ceyti! cilai kaik koṇṭāl veṟuṅ kai tirivōrai
noytiṉ velvatu aritō?" eṉṉā, muṟuval uka nakkāṉ;
aiyaṉ, aṅkum iṅkum kālāl aḻiyum maḻai eṉṉa
eyta eyta pakaḻi ellām eḻuvāl akalvittāṉ