கம்பராமாயணம் 5656 · சுந்தர 10.7

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள
மான மாற்று அரு மாருதி முனிய நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட;
வான யாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த.

பொருள் · Meaning in Tamil

மழை பொதுத்து உயர் நெடும் தாள - மேகத்தைக் குத்துமாறு மேலே உயர்ந்து செல்லும் நீண்ட கால்களை உடையனவும்; வான யாற்று வெண்திரை என வரம்பு இல பரந்த - ஆகாய கங்கை யாற்றின் வெண்மை நிறமுள்ள அலை போலப் பலவாக உள்ளனவுமான; தானை மாக்கொடி - அரக்கர் சேனையில் விளங்கிய பெரிய வெண்ணிறக் கொடிகள்; மாற்ற அரு மானம் மாருதி முனிய - மாற்ற முடியாத பெருமை உடைய அனுமன் கோபித்திட; நாள் உலந்து போன மாற்றலர் புகழ் என - (அதனால்) ஆயுட்காலம் அழிந்து, வீரசுவர்க்கம் சென்ற பகைவர்களது புகழைப் போல; கால் பொரப் புரண்ட - காற்று மோதுதலால் அசைந்தாடின.

கால் - காற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great banners of the army, on tall poles that pierced the clouds,
  2. tossed as the wind struck them, like the fame of foes whose days ended
  3. when Māruti, whose honour none can undo, grew angry;
  4. they spread without number, like the white waves of the river of the sky.

What the poem says

The army's white flags fly high on poles that pierce the clouds, as countless as the white waves of the heavenly Ganges.

As they flutter in the wind, the poet compares them to the fame of enemies already slain by Aṉumaṉ (Māruti, son of the Wind): the banners wave like the reputation those dead warriors left behind, and also foreshadow that these troops will meet the same end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉai mākkoṭi maḻai potuttu uyar neṭum tāḷa
māṉam māṟṟa aru māruti muṉiya nāḷ ulantu
pōṉa māṟṟalar pukaḻ eṉak kāl porap puraṇṭa;
vāṉa yāṟṟu veṇ tirai eṉa varampu ila paranta.