கம்பராமாயணம் 5657 · சுந்தர 10.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கர் - அந்த இராக்கத வீரர்கள்; விரவு பொற் கழல் விசித்தனர் - (வீரத்துக்கு அடையாளமாகப்) பொருந்திய பொன்னால் செய்த வீரக் கழல்களைக் காலில் கட்டி; சரம் ஒடுக்கின புட்டிலும் வெரிந் உற்று விளங்கச் சாத்தினர் - அம்புகளை உள்ளே கொண்ட அம்பறாத் தூணியையும் முதுகிற் பொருந்தி விளங்க அணிந்து கொண்டு; சமையக் கருவி புக்கனர் - நன்றாக அமையும் படிக் கவசத்தையும் பூண்டனர்; புரவி மாப்பல்லணம் கவின இட்ட - குதிரைகள், சிறந்த சேணங்கள் அழகாக விளங்க அணியப்பட்டன; தேர் பூட்டின - தேர்கள் சித்தம் செய்யப் பட்டன; பூட்கை பருமித்த - யானைகள் அலங்கரிக்கப்பட்டவை ஆயின.
நால்வகைச் சேனைகளும் போர்க்குக் கோலம் செய்து விட்டமை இங்குக் கூறப் பட்டது. கருவி - கவசம்; 'இளைஞரும் கருவி வீசினார்; (சீவக - 22/4 உறை பருமித்தல் - அலங்கரித்தல்; 'பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து ' (சீவக 2113)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons bound on golden anklets that fitted well; so that it lay shining against the back,
- they strapped on the quiver packed with arrows; and so as to be well fitted,
- they put on their armour; fine saddles were set on the bridled
- horses; chariots were yoked; elephants were decked for war.
What the poem says
All four arms of the army prepare for battle. The warriors tie on the golden anklets that mark a hero, sling their full quivers across their backs and put on armour.
The horses are saddled and bridled, the chariots harnessed, and the elephants adorned in their battle trappings.