கம்பராமாயணம் 5658 · சுந்தர 10.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆனையின் மதங்கள் ஆறு செய்தன - (போருக்குச் சென்ற) யானைகளின் மதப் பெருக்குகள் (சென்ற இடங்களில்) ஆறுகளை உண்டாக்கின; அவ் ஆற்றை - அந்த மதநீர் ஆற்றை; தேர்களின் சில்லி சேறு செய்தன - தேர்களின் சக்கரங்கள் (ஓடிச்) சேறாகக் குழப்பி விட்டன; அச் சேற்றை - அவ்வாறு உண்டாகிய சேற்றை; புரவியின் குரம் நீறு செய்தன - குதிரைகளின் குளம்புகள் மிதித்துப் புழுதியாகச் செய்தன; அந் நீற்றை - அந்தப் புழுதியை; அப் பரிக் கலின மா விலாழி - அந்தக் குதிரைகளின் கடிவாளம் பூண்ட வாயிலிருந்து வழிகின்ற நுரைகள்; வீறு செய்தன - வேறு வேறாய்ப் பிளவுபடச் செய்தன.
வாய்நுரை - உயர்வு நவிற்சி; இவ்வருணனை பாக்களில் மிகுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rut of the elephants made rivers; those rivers
- the wheels of the chariots churned into mud; that mud
- the hooves of the horses ground into dust; and that dust
- the great foam from the bridled mouths of those horses broke apart.
What the poem says
A chain of hyperbole describes the army on the march. So much rut-fluid streams from the war elephants that it forms rivers; the chariot wheels churn the rivers into mud; the horses' hooves pound the mud into dust; and the foam dripping from the bridled horses' mouths soaks and scatters the dust again.
The commentary calls the image of the foam an exaggeration for effect, a figure common in such descriptions.