கம்பராமாயணம் 5660 · சுந்தர 10.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழித் தேர்த்தொகை ஐம்பதினாயிரம் - சக்கரங்களைக் கொண்ட தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம் என்னும் அளவினதாம்; சூழிப் பூட்கைக்குத் தொகை அஃதே - முகபடாம் அணிந்த யானைகளின் தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; ஊழிக் காற்று அன்ன புரவி - யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச் செல்கின்ற குதிரைகள்; அவற்று இரட்டியின் தொகைய - அந்தத் தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி - பெரிய தோள்களையும், சிறந்த ஆயுதங்களையும் உடைய காலாட்படைப் பிரிவுகளின் கணக்கு; அவற்றினுக்கு இரட்டி - அந்தக் குதிரைப் படைகளுக்கு இரு மடங்காகும் (இரண்டு லட்சம்)
பஞ்சசேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படையின் எண்ணிக்கை கூறியது. சூழி - யானைகளின் முகத்தில் அணியும் முகபடாம். பூட்கை - யானை. பாழிதோள் - பெரியதோள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The wheeled chariots numbered fifty thousand; the same
- was the count of the elephants in face-armour; twice their number
- were the horses swift as the wind at the end of the age; and twice those again
- were the divisions of foot soldiers with mighty shoulders and long weapons.
What the poem says
The size of the generals' army is given: fifty thousand chariots, as many elephants wearing ornamental face-cloths, twice as many horses as fast as the cosmic wind, and twice that number again of foot soldiers, according to the commentary two hundred thousand of them.