கம்பராமாயணம் 5668 · சுந்தர 10.19

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் திணிந்த தோள் இராவணன் - பொன்னாபரணங்கள் நிறைந்த தோள்களை உடைய இராவணனது; மார்பொடும் பொருத அன்று இழந்த கோடு - மார்பினோடும் போர் புரிந்த அந்தக் காலத்தில் (திசை யானைகள் இழந்தவையான கொம்புகளை; அரிந்து இடும் உறும் குழையர் - அறுத்து அவற்றைக் கொண்டு செய்த அழகு பொருந்திய காதணியை உடையவர்கள்; திசை நின்றவல் நெடும் களி யானையின் - (அன்றியும்) எட்டுத் திக்குகளிலும் தோற்று நின்ற வலிய பெரிய செருக்குற்ற யானைகளின்; நெற்றி மின் திணிந்த அன ஓடையின் - நெற்றிகளில் அணிந்த மின்னல்கள் நெருங்கி நின்றாற் போன்ற (மிக்க ஒளியை உடைய) முகபடாத்தினால் இயன்ற; வீர பட்டத்தர் - வீரபட்டத்தை அணிந்தவர்.

பஞ்சசேனாபதிகளின் வீரச் சிறப்பை விளக்குவது. குழை - காதணி; யானையின் தந்தங்களால் காதணி செய்வது வீரம். ‘நாக மருப்பின் இயன்றதோடும்' (சீவக - 2440) திசை யானையின் நெற்றிப் பட்டத்தால் ஆன வீரபட்டம் நெற்றியில் அணிவதும் வீரர் மரபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They wore beautiful ear-rings cut from the tusks that were lost
  2. on the day they clashed with the chest of Irāvaṇaṉ of the gold-packed shoulders;
  3. they wore hero's bands made of the face-plates, dense as massed lightning,
  4. from the brows of the huge rutting elephants that stand in the strong quarters.

What the poem says

More of the generals' trophies are described. The elephants of the eight directions once broke their tusks against Irāvaṇaṉ's chest; the generals cut those tusks into ear-rings. From the same elephants' brows they took the dazzling ornamental face-plates and wore them as hero's bands on their foreheads.

Wearing ivory ear-rings and an enemy's brow-plate were marks of valour in old Tamil tradition.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tiṇinta tōḷ irāvaṇaṉ mārpoṭum poruta
aṉṟu iḻanta kōṭu arintu iṭum aḻaku uṟu kuḻaiyar;
niṉṟa vaṉ ticai neṭuṅ kaḷi yāṉaiyiṉ neṟṟi
miṉ tiṇinta aṉa ōṭaiyiṉ vīra paṭṭattar.