கம்பராமாயணம் 5671 · சுந்தர 10.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்தணன் பணியன் ஆக - முதல் அந்தணனாகிய பிரம்ம தேவனது கட்டளையின் படி நடப்பவனாய்; பால் நிறுத்து - (உயிர்களின்) விதியைச் சீர் தூக்கிப் பார்த்து; நின் கோல் நினைத்திலன் - (இலங்கையில் உள்ளவர்க்கும் அவரவர் விதியின்படி ஆயுட் காலத்தை நடப்பிப்பவனாய்) இலங்கை உனது கோலுக்கு உட்பட்டது என்பதை நினைத்தானில்லை; என உலகம் கூறலும் நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் - என்று உலகம் சொல்லுதலும் (அது கேட்ட) கருநிறத்து இராவணனது கோபத்தைப் போக்கும் பொருட்டு; காலனைக் காலினில் கையில் கட்டினார் - யமனையும் கால்களிலும் கைகளிலும் கட்டிச் சிறையிலே வைத்தவர்கள் (இவர்கள்.
காலன் இராவணனது மேலாண்மையை மதிக்காமல், பிரமன் கட்டளைக்குப் பணிந்தவனாய், ஊழ்வினைப் படியே தன் பணியைச் செய்தவன் அதனால், அந்த யமனுடைய கைகால்களைப் பஞ்சசேனாபதியர் கட்டினார்கள் என்பது கருத்து. பால் - ஊழ்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Weighing out fate as the servant of the first Brahmin,
- he has not regarded your sceptre,' said the world; at that,
- to quell the anger of dark-hued Irāvaṇaṉ,
- they bound Kālaṉ, the god of death, hand and foot.
What the poem says
Yama, god of death, took lives in Laṅkā as fate decreed, obeying Brahmā rather than Irāvaṇaṉ's rule. When people pointed this out and Irāvaṇaṉ grew angry, the five generals tied Yama up hand and foot to appease their king.
The verse shows that even death was once their prisoner.