கம்பராமாயணம் 5672 · சுந்தர 10.23

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலைகளை நகும் தடமார்பர் - (அவர்கள்) மலைகளை ஏளனம் செய்யும் பரந்த மார்பை உடையவர்கள்; மால்கடல் அலைகளை நகும் நெடும் தோளர் - பெரிய கடலின் அலைகளைப் பழிக்கும் நீண்ட தோள்களை உடையவர்கள்; அந்தகன் கொலைகளை நகும் நெடும் கொலையர் - யமனுடைய கொலைத் தொழிலைப் பழிக்கும் பெரும் கொலைத் தொழிலை உடையவர்கள்; கொல்லன் ஊது உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் - கொல்லன் (துருத்தி கொண்டு) ஊதும் உலைக்களங்களைப் பார்த்து இகழ்ந்து (சிவப்பன போல) நெருப்பை கக்குகின்ற கண்களை உடையவர்கள்.

இந்த அரக்கவீரர்களுடைய மார்பு முதலியவை மலை முதலியவற்றினும் விஞ்சியவை என்பது கூறப்பட்டது. விதிப்படி ஆயுள் முடிந்தோரை மட்டுமே கூற்றுவன் கொல்வான்; இராவணனின் படைத்தலைவர்கள் எவரையும் கொல்வர். ஆகையால், யமனுடைய கொலைத் தொழிலைப் பழிப்பவர் (ஏளனப் படுத்துவோர்) ஆனார், பஞ்ச சேனாபதியர். தாடகை பற்றி இராமனிடம் விசுவாமித்திரர் கூறியபோது, விதி முடிந்தது என்ற ஒரே தருமத்தை நோக்குவான் “கூற்றுவன்; மூக்கில் ஓர் அயல் மணம் முகர்ந்தால் எதிர்ப்படும் எதனையும் கொன்று தீர்ப்பாள் இவள். இவளைப் போல் உயிரினம் தின்னும் ஒரு கூற்றும் (கம்ப. 380) உண்டோ என்று சொல்லிய கருத்து நினையத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their broad chests mocked the mountains; their long shoulders
  2. mocked the waves of the great sea; their great killings
  3. mocked the killings of Antakaṉ; their eyes, spitting fire,
  4. mocked the furnaces that the smith blows.

What the poem says

Every feature of the generals outdoes the things it might be compared to: their chests are broader than hills, their arms longer than ocean waves, their eyes hotter than a smith's forge.

They even scorn Yama, the god of death, because he kills only those whose time has come, while they kill anyone at all. The commentary recalls the earlier description of Tāṭakai, who likewise slew without regard to fate.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1malaikaḷai nakum taṭa mārpar māl kaṭal
alaikaḷai nakum neṭun tōḷar antakaṉ
kolaikaḷai nakum neṭuṅ kolaiyar kollaṉ ūtu
ulaikaḷai nakum aṉal umiḻum kaṇṇiṉār.