கம்பராமாயணம் 5674 · சுந்தர 10.25

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இவ் வகை அனைவரும் எழுந்த தானையர்
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கையுற அணியும் கட்டினார்
ஐயனும் அவர் நிலை அறிய நோக்கினான்.

பொருள் · Meaning in Tamil

இவ்வகை அனைவரும் - இவ்வாறாக அந்தப் படைத் தலைவர் ஐவரும், எழுந்த தானையர் - மேல் நோக்கி எழுந்த சேனையை உடையவராய்; மொய்கிளர் தோரணம் அதனை முற்றினார் - வலிமையால் விளங்கும் தோரண வாயிலைச் சூழ்ந்து கொண்டு; கையொடு கை உற - ஒரு பக்கத்தோடு மற்றொரு பக்கமும் பொருந்த; அணியும் கட்டினார் - சேனைகளை அணிவகுத்து அமைத்தனர்; ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் - அனுமனும் அவர்களது போர் நிலையை நன்றாகப் பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In this way all of them, with their armies risen up,
  2. surrounded that strong, splendid gateway arch;
  3. they drew up their ranks wing joined to wing;
  4. and the noble one took a good look at how they stood.

What the poem says

The five generals and their army encircle the ornamental gateway where Aṉumaṉ has stationed himself, arranging their divisions so that the flanks close in on every side. Aṉumaṉ calmly studies their battle order.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iv vakai aṉaivarum eḻunta tāṉaiyar
moy kiḷar tōraṇam ataṉai muṟṟiṉār;
kaiyoṭu kai uṟa aṇiyum kaṭṭiṉār
aiyaṉum avar nilai amaiya nōkkiṉāṉ.