கம்பராமாயணம் 5675 · சுந்தர 10.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கரது ஆற்றலும் - (அனுமனைச் சூழ்ந்து கொண்ட) பஞ்ச சேனாபதிகளின் வலிமையையும்; அளவு இல் சேனையின் தருக்கும் - அளவற்ற அந்தச் சேனையின் பெருமிதத்தையும்; அம்மாருதி தனிமைத் தன்மையும் - அந்த அனுமன் தனியாய் நிற்கும் நிலைமையையும்; பொருக்கென நோக்கிய புரந்தராதியர் - திடீரென்று பார்த்த இந்திரன் முதலிய தேவர்கள்; இரக்கமும், அவலமும் துளக்கும் எய்தினார் - (அனுமனிடத்துக்) கருணையும், துன்பமும் நடுக்கமும் (ஒருங்கே) அடைந்தனர்.
இந்திரன் முதலிய தேவர்கள், பஞ்ச சேனாபதிகளின் ஆற்றலை நன்கு அறிந்தவர்கள். அதனால், சேனைகளின் நடுவில் தனித்து நிற்கும் அனுமனது நிலைக்கு, இரக்கமும் அவலமும் அடைந்தனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The might of the demons, the pride of the boundless army,
- and the loneliness of that Māruti:
- Purantaraṉ and the other gods, seeing all this at a glance,
- were filled with pity, grief and trembling.
What the poem says
Indra and the other gods watch from the sky. They know how powerful the five generals are, and seeing Aṉumaṉ standing alone against their vast army, they feel pity for him, grief and fear.