கம்பராமாயணம் 5676 · சுந்தர 10.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கற்று உணர் மாருதி - (பல நூல்களையும்) கற்றுத் தேர்ந்த அனுமான்; அரக்கர் இப் பகலுளே இற்றனர் எனா, களிக்கும் சிந்தையான் - இந்த அரக்கர்கள், இன்று ஒரு பகல் பொழுதுக்குள்ளே அழிவது உறுதி என்று எண்ணி மகிழ்கின்ற மனத்தினனாம்; முற்று உறச் சுலாவிய முடிவு இல் தானையை - (தன்னை) முழுவதும் சூழ்ந்து கொண்ட எல்லையற்ற அரக்கர்படைகளை; சுற்று உற நோக்கி - நான்கு பக்கத்திலும் நன்றாகப் பார்த்து; தன் தோளை நோக்கினான் - தனது தோள்களையும் பார்த்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The demons are finished before this day is out,' thought
- Māruti, wise with learning, his heart full of glee;
- he looked all round at the endless army
- that encircled him completely, and then looked at his own shoulders.
What the poem says
Aṉumaṉ, in contrast to the anxious gods, is delighted. Learned and shrewd, he is certain the demons will all be dead before the day ends. He surveys the army surrounding him and then glances at his own shoulders, confident in his strength.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṟṟaṉar arakkar ip pakaluḷē'eṉā
kaṟṟu uṇar māruti kaḷikkum cintaiyāṉ
muṟṟuṟac culāviya muṭivu il tāṉaiyaic
cuṟṟuṟa nōkki taṉ tōḷai nōkkiṉāṉ.