கம்பராமாயணம் 5680 · சுந்தர 10.31

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர்; பொங்கினார்;
செறிந்தன மயிர்ப் புறம்;'தினவு தீர்வுறச்
சொறிந்தனர்'என இருந்து ஐயன் தூங்கினான்.

பொருள் · Meaning in Tamil

அரக்கர் - அந்த அரக்கப் படை வீரர்கள்; பொறிந்து எழு எண் இறந்தன படைக்கலம் - அனற் பொறிகளை விட்டுக் கொண்டு மேற் கிளம்பும் கணக்கற்ற ஆயுதங்களை; எறிந்தனர் எய்தினர் போக்கினார் - எறிந்தும் எய்தும் அனுமன் மீது செலுத்தினர்; மயிர்ப் புறம் செறிந்தன - (அவை அனுமன் மீதுள்ள அடர்ந்த மயிர்களின் மீது நெருங்கியனவாய்; தினவு தீர்வுறச் சொறிந்தன என - அனுமனுக்கு உண்டான உடல் தினவைப் போக்கச் சொறிந்தன போல இருக்க; இருந்து - இனிதிருந்து; ஐயன் தூங்கினான் - அனுமான் கண்ணுறங்குபவன் போல (ஆனந்தத்தினால் கண்மூடிக் கொண்டிருந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons hurled and shot countless weapons
  2. that rose throwing out sparks; they sent them at him;
  3. they lodged thick in the hair of his back; 'they are scratching
  4. to relieve my itch,' the noble one seemed to think, and sat there dozing.

What the poem says

The demons shower Aṉumaṉ with flaming spears and arrows, but they only stick in the thick hair of his body. To him they feel like someone scratching an itch, and he sits there with his eyes closed in pleasure as though half asleep.

The humour shows how little their weapons can hurt him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟintaṉar eytaṉar eṇ iṟantaṉa
poṟintu eḻu paṭaikkalam arakkar; pōkkiṉār;
ceṟintaṉa mayirp puṟam;'tiṉavu tīrvuṟac
coṟintaṉar'eṉa iruntu aiyaṉ tūṅkiṉāṉ.