கம்பராமாயணம் 5681 · சுந்தர 10.32

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்;
செற்று உற நெருக்கினர்; செருக்கும் சிந்தையர்;
'மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து
எற்றுவன்'என எழு அனுமன் ஏந்தினான்.

பொருள் · Meaning in Tamil

அரக்கரும் - அந்த அரக்கவீரர்களும்; செருக்கும் சிந்தையர் உற்று - அகந்தை கொண்ட மனத்தினராய் அனுமனை நெருங்கி; உடன்று, உருத்து உடற்றினர் - சினத்தால் மாறுபட்டு, கருஞ்சினம் மூண்டு விரைந்து படைக்கலங்களைப், பரபரப்புடன் விட்டனர்; செற்று உற நெருக்கினர் - இறந்து பட அனுமனைப் பல வழியாலும் தாக்கினர்; அனுமன் - (அப்போது) அனுமான்; மற்றையர் வரும் பரிசு - “மற்றுமுள்ள அரக்கரும் போர் செய்ய வரும் விதமாக; இவரை வல் விரைந்து எற்றுவென்” என - இந்த அரக்கர்களை அழிப்பேன்' என்று எண்ணி; எழு ஏந்தினான் - இரும்புத் தூணைக் கையில் எடுத்துக் கொண்டான்.

அரக்கர்களின் போர்ச் செயலும், அனுமனது வீரச் செயலும் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons, closing in, furious, burned with wrath and attacked;
  2. they pressed on him hard to kill; their minds swelled with pride;
  3. 'So that the rest may come on too, I will swiftly and strongly
  4. smash these,' thought Aṉumaṉ, and lifted up an iron bar.

What the poem says

The proud demons crowd in, attacking from every side to kill him. Aṉumaṉ decides to destroy this first wave quickly so that the rest of the army will come forward too, and he picks up an iron pillar to use as a club.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟu uṭaṉṟu arakkarum uruttu uṭaṟṟiṉar;
ceṟṟuṟa nerukkiṉar; cerukkum cintaiyar;
'maṟṟaiyar varum paricu ivarai val viraintu
eṟṟuveṉ'eṉa eḻu aṉumaṉ ēntiṉāṉ.