கம்பராமாயணம் 5683 · சுந்தர 10.34

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வார் மதக்கரிகளின் - நீண்ட மத யானைகளின்; கோடு வாங்கி - கொம்புகளை முறித்தெடுத்து; மாத்தேர் படப் புடைக்கும் - பெரிய தேர்கள் அழிய அடிப்பான்; அத்தேரின் சில்லியால் வீரரை உருட்டும் - அழிந்த தேர்களின் சக்கரங்களைக் கொண்டு, போர் வீரர்களை உருண்டு விழச் செய்வான்; அவ்வீரர் வாளினால் - உருண்டு வீழ்ந்த அரக்கவீரரது கைவாள்களைக் கொண்டு, தார் உடைப் புரவியை துணியத்தாக்கும் - கிண்கிணி மாலை பூண்ட குதிரைகளைத் துணிபட்டு விழும்படி வெட்டுவான்.

அனுமன், தான் அழித்த பொருள்களையே ஆயுதங்களாகக் கொண்டு அப்படைகளைக் கொன்றான் என்பதாம். அனுமன் இதேபோலப் போர் செய்தை 5579 ஆம் பாடலிலும், அடுத்த 5635ஆம் பாடலிலும் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He wrenches out the tusks of the elephants streaming with rut and with them
  2. beats the great chariots to pieces; with the wheels of those chariots
  3. he sends the warriors rolling; with the swords of those warriors
  4. he hacks the horses with their garlands of bells till they fall in pieces.

What the poem says

Aṉumaṉ uses each thing he destroys as a weapon for the next: the elephants' tusks to wreck the chariots, the chariot wheels to bowl over the soldiers, and the soldiers' swords to cut down the horses. He fought the same way in earlier battles in this book.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vār matak karikaḷiṉ kōṭu vāṅki māt
tēr paṭap puṭaikkum; at tēriṉ cilliyāl
vīrarai uruṭṭum; av vīrar vāḷiṉāl
tāruṭaip puraviyait tuṇiyat tākkumāl.