கம்பராமாயணம் 5685 · சுந்தர 10.36

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மா இரு நெடுவரை வாங்கி - (மேலும் அனுமன் பக்கத்தே உள்ள மிகப் பெரிய மலையை எடுத்து; (அதனைக் கொண்டு) ஆயிரம் தேர் பட மண்ணில் இட்டு அழித்து அரைக்கும் - ஆயிரந் தேர்கள் அழியும்படி, அவைகளைத் தரையில் வைத்து அரைப்பான்; ஏ எனும் மாத்திரத்து - இரண்டு மாத்திரைப் பொழுதிற்குள்; ஓர் மரத்தினால் - ஒரு மரத்தைக் கொண்டு; ஆயிரம் களிற்றை அடித்து எற்றி முற்றும் - ஆயிர யானைகளை அடித்து (அவற்றை) மாயச் செய்வான்.

ஏ யெனும் அளவு இரண்டு மாத்திரை நேரம்; கண் இமைக்கும் நேரம் ஒரு மாத்திரை. 'ஏ' நெடிலெழுத்து; ஆகையால் இரண்டு மாத்திரை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He pulls up a great, huge, tall hill, lays it on the ground
  2. and grinds a thousand chariots to destruction; having destroyed them,
  3. he beats a thousand bull elephants with a single tree,
  4. and in the time it takes to say 'ē', he smashes and finishes them.

What the poem says

Aṉumaṉ uproots a mountain and grinds a thousand chariots under it, then fells a thousand elephants with a tree, all in the time it takes to pronounce the long vowel ē.

In Tamil prosody a long vowel lasts two mātrai, a mātrai being the time of a blink, so the phrase means an instant.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā iru neṭu varai vāṅki maṇṇil iṭṭu
āyiram tēr paṭa araikkumāl; aḻittu
āyiram kaḷiṟṟai ōr marattiṉāl aṭittu
ē eṉum māttirattu eṟṟi muṟṟumāl.