கம்பராமாயணம் 5686 · சுந்தர 10.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உதைக்கும் வெம்கரிகளை - (பகைவர் தன் மீது) செலுத்துகின்ற கொடிய யானைகளைக் காலில் உதைப்பான்; தேர்களை உழக்கும் - தேர்களைக் கலக்குவான்; வன் புரவியை மிதிக்கும் - வலிய குதிரைகளைக் காலால் மிதிப்பான்; வீரரைத் தேய்க்கும் - வீரர்களைத் தரையோடு சேர்த்துத் தேய்த்து விடுவான்; வல் எழுவினால் மண்ணிடை மதிக்கும் - (தான் கையில் கொண்ட) வலிய எழுவால் தரையிட்டுக் குழம்பாக்குவான்; வன் தலை இடைக் குதிக்கும் - (மேலும்) அவ்வரக்கரின் தலையிடத்தே குதிப்பான்; கடிக்கும், குத்தும் - அவர்களைக் கடிப்பான் குத்துவான்.
எழு - ஒருவகைப் போர்க் கருவி. மதிற்கதவில் குறுக்கே இடப்படும் கணையமரம் எனவும் கூறுவர். மதித்தல் - கடைவது போலக் குழப்புதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He kicks the fierce elephants; he churns up the chariots;
- he tramples the strong horses; he grinds the warriors down;
- with his strong iron bar he pounds them to pulp upon the ground;
- he leaps on their hard heads; he bites; he punches.
What the poem says
A rapid list of Aṉumaṉ's ways of fighting: kicking elephants, tossing chariots about, trampling horses, crushing soldiers, mashing them into the earth with his iron bar, jumping on their heads, biting and punching.
The weapon called eḻu is an iron bar, sometimes explained as the beam that bolts a fortress gate.