கம்பராமாயணம் 5687 · சுந்தர 10.38

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகன்
திசையும் ஆகாயமும் செறியச் சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும்
பிசையுமால் அரக்கரைப் பெரும் கரங்களால்.

பொருள் · Meaning in Tamil

விசையின் - (மேலும் அவ்வனுமன்) வேகமாக, மான் தேர்களும் களிறும் விட்டு - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையும் யானைகளையும் விட்டெறிந்து; அகல் திசையும் ஆகாயமும் செறியச் சிந்தும் - அகன்ற திக்குகளும் ஆகாசமும் போய் நிறையும் படி சிதறிவிழச் செய்வான்; குசை கொள் பாய் பரியொடும் - கடிவாளத்தைக் கொண்ட பாய்ந்து செல்லும் தன்மையுள்ள குதிரைகளுடனும்; கொற்ற வேலொடும் - (கையிற் பிடித்த) வெற்றி பொருந்திய வேலாயுதத்துடனும்; அரக்கரை - அந்த அரக்க வீரர்களை; பெரும் கரங்களால் - (தனது) பெரிய கைகளினால், பிசையும் - பிசைந்து கொல்வான்.

மான் - குதிரை. குசை - கடிவாளம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With speed he flings the horse-drawn chariots and the elephants
  2. and scatters them till the wide quarters and the sky are crammed;
  3. together with their bridled leaping horses and their conquering spears
  4. he kneads the demons with his huge hands.

What the poem says

Aṉumaṉ hurls chariots and elephants so far that they fill the directions and the sky. Demon horsemen he squeezes to death in his great hands, horses, spears and all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vicaiyiṉ māṉ tērkaḷum kaḷiṟum viṭṭu akal
ticaiyum ākāyamum ceṟiyac cintumāl;
kucai koḷ pāy pariyoṭum koṟṟa vēloṭum
picaiyumāl arakkaraip peruṅ karaṅkaḷāl.