கம்பராமாயணம் 5688 · சுந்தர 10.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறு தீப் பொறி உடை - மிக்க நெருப்புப் பொறிகளை உடைய; செங்கண் வெங்கை மா - சிவந்த கண்களைக் கொண்ட கொடிய யானைகளை; வீரன் தடக் கையால் மீ உற வீசு தோறு - அனுமன் தனது பெரிய கைகளைக் கொண்டு ஆகாயத்தின் மீது வீசி எறியுந் தோறும்; ஆய் பெருங் கொடியன - சிறந்த பெரிய கொடிகளை உடையவாகி; கடலின் ஆழ்வன - கடலில் வீழ்பவை; பாய் உடை நெடும் கலம் படுவ போன்ற - பாய் மரங்களை உடைய நெடிய மரக்கலங்கள் (கடலில்) மூழ்குவனவற்றை ஒத்திருந்தன.
கொடியோடு யானை கடலில் ஆழ்வது, பாய் மரத்தோடு மரக்கலம் கடலில் மூழ்குவதை ஒத்திருந்தது. “பண்ணார் களிறே போல் பாயோங்குயர் நாவாய்” (சீவக சிந்தாமணி 2793) எனப் பாய்மரக் கப்பல்கள் கொடி தாங்கிய களிறுபோல் தோற்றம் அளிப்பதாகத் திருத்தக்க தேவரும் பாடினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Each time the hero with his great hand flung high
- the fierce red-eyed elephants with fiery sparks in their eyes,
- they sank into the sea with their fine great banners,
- like tall ships with their sails going down.
What the poem says
Aṉumaṉ throws the war elephants, still flying their tall banners, far out into the ocean. As they sink, banners and all, they look like great sailing ships going under.
The commentary notes that the Cīvaka Cintāmaṇi uses the reverse image, comparing a sailing ship to an elephant bearing a flag.