கம்பராமாயணம் 5690 · சுந்தர 10.41

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீ உற விண் இடை முட்டி வீழ்வன
ஆய் பெரும் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன
ஓய்வு இல புரவி வாய் உதிரம் கால்வன
வாய் இடை எரி உடை வடவை போன்றவே.

பொருள் · Meaning in Tamil

மீ விண் இடை உற - மேலேயே உள்ள வானிடத்துப் பொருந்த, (அனுமன் வீசி எறிந்ததனால்); முட்டி வீழ்வனவாய் - சென்று முட்டுண்டு கீழே விழுகின்றனவாய்; பெருந்திரைக் கடல் அழுவத்து ஆழ்வன - பெரிய அலைகளை உடைய கடற் பரப்பில் அமிழ்வனவும்; ஓய்வில புரவி - எண்ணிறந்த குதிரைகள்; வாய் உதிரம் கால்வன - வாய்களினின்றும் இரத்த நீரைச் சொரிகின்றவை; வாயிடை எரி உடை - வாயிடத்து நெருப்பை உடைய; வடவை போன்ற - வடவாமுகாக்கினி போன்று விளங்கின.

வடவை என்பது கடலில் உள்ள நீர் கொந்தளித்து எழாதபடி அந் நீரைச் சுவறச் செய்யும் தீயைத் தன் முகத்தில் கொண்டுள்ளதாய்க் கடவுளால் அமைக்கப்பெற்ற ஒரு பெண் குதிரை என்று நூல்கள் கூறும். இங்குக் குதிரைகள், வடவைக் குதிரைக்கும், அவற்றின் வாயிலிருந்து வெளிப்படும் இரத்தம் அவ் வடவைக்குதிரை வாயிலிருந்து தோன்றும் நெருப்புக்கும் உவமை ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Striking the sky high above and falling back,
  2. sinking into the expanse of the sea with its fine great waves,
  3. the countless horses pouring blood from their mouths
  4. looked like Vaṭavai with fire in her mouth.

What the poem says

The horses Aṉumaṉ hurls hit the sky, then fall into the sea spurting blood from their mouths. They recall Vaṭavai, the mythical mare with a fire in her mouth who lives under the ocean; the books say she was placed there by the gods to drink up the water and keep the sea from overflowing.

The horses stand for the mare and the blood for her fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mī uṟa viṇṇiṭai muṭṭi vīḻvaṉa
āy perun tiraik kaṭal aḻuvattu āḻvaṉa
ōyvila puravi vāy utiram kālvaṉa
vāyiṭai eriyuṭai vaṭavai pōṉṟavē.