கம்பராமாயணம் 5691 · சுந்தர 10.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாலினால் வல்லிதின் உறச் சுற்ற வரிந்து - அனுமன் தனது வாலினால் அழுத்தமாகச் சுற்றிக்கட்டி; விரிந்து உற வீசலின் - வெகு தூரம் செல்லும்படி வீசியெறிதலினால்; கடலின் வீழ்குநர் திரிந்தனர் - கடலில் போய் விழுந்து சுழல்கின்ற அரக்கவீரர்கள்; செறி கயிற்று அரவினால் திரி - நெருங்கிய வாசுகி என்னும் (பாம்பு) கயிற்றினால் கடையப்பட்டுச் சுழன்ற; அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார் - அரிய வலிமை பெற்ற மந்தரமலையை ஒத்தவராயினர்.
அரக்கர்களாகிய காலாட்படை அழிந்தமை கூறப்பட்டது. அரக்கர்கள் மந்தர மலைக்கும் அனுமன் வால் வாசுகி என்னும் பாம்புக்கும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Wound tight and firmly bound in his tail,
- and flung far, those who fell into the sea
- whirled round; they became like mighty Mantaram
- turned by the serpent that was its tightly wound rope.
What the poem says
Aṉumaṉ wraps demon foot-soldiers in his tail and slings them into the sea, where they spin around. The image recalls the churning of the ocean of milk, when the gods and demons used Mount Mantara as a churning stick and the serpent Vāsuki as the rope.
Here the demons are the mountain and Aṉumaṉ's tail is the serpent.