கம்பராமாயணம் 5692 · சுந்தர 10.43

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வீரன் வன்தடக் கையால் எடுத்து வீசிய
வார் மத கரியினில் தேரின் வாசியின்
மூரி வெம் கடல் புகக் கடிதின் முந்தின;
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின.

பொருள் · Meaning in Tamil

ஊரின் வெம்குருதி ஆறு - விரைந்து செல்கின்ற வெப்பமுள்ள இரத்தப் பெருக்குகள்; வீரன் வன் தடக்கையால் - அனுமன் தனது பெரிய கைகளால்; எடுத்து வீசிய - எடுத்து வீசி எறிந்த; வார் மத கரியினின் - ஒழுகுகின்ற மத நீரை உடைய யானைகளினும்; தேரின் - தேர்களினும்; வாசியின் - குதிரைகளினும்; மூரி வெம்கடல் புக கடிதின் முந்தின - வலிய கொடிய கடலில் புக விரைந்தனவாய்; ஈர்ப்ப ஓடின - இழுக்கப்பட்டு ஓடின.

ஊரின் என்பது விரைவின் என்ற பொருளில் வந்துள்ளது அருகிய வழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Faster than the rutting elephants, the chariots and the horses
  2. that the hero lifted and hurled with his strong great hand,
  3. the hot rivers of blood raced swiftly ahead to enter
  4. the mighty fierce sea, sweeping things along as they ran.

What the poem says

So much blood flows from the slaughter that it forms swift rivers, which reach the sea even faster than the elephants, chariots and horses Aṉumaṉ is throwing into it, dragging bodies along with them.

The word ūr here is used in the rare sense of speed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīraṉ vaṉtaṭak kaiyāl eṭuttu vīciya
vār matak kariyiṉiṉ tēriṉ vāciyiṉ
mūri veṅ kaṭal pukak kaṭitiṉ muntiṉa;
ūriṉ veṅ kuruti āṟu īrppa ōṭiṉa.