கம்பராமாயணம் 5693 · சுந்தர 10.44

Section சுந்தர காண்டம் / 10. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பிறைக் கடை எயிற்றின பிலத்தின் வாயின
கறைப் புனல் பொறிகேளாடு உமிழும் கண்ணன
உறுப்பு உறு படையின உதிர்ந்த யாக்கைகள்
மறைத்தன மகரம் தோரணத்தை வான் உற.

பொருள் · Meaning in Tamil

பிறைக்கடை எயிற்றின - பிறையின் நுனி போன்று வளைந்த பற்களை உடையவனவும்; பிலத்தின் வாயின - குகைகளைப் போன்ற வாய் உடையனவும்; கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணன - கறைபடிந்த இரத்தமாகிய நீரை, நெருப்புப் பொறிகளோடு உமிழ்கின்ற கண்கள் கொண்டனவும்; உறைதபு படையன - உறைகளினின்று நீக்கி எடுத்த ஆயுதங்கள் பொத்துக் கொள்ளப் பெற்றனவுமான; உதிர்ந்த யாக்கைகள் - உயிரொழிந்து கீழே விழுந்துள்ள பிணக் குவியல்கள்; வான் உற - ஆகாயத்தை அளாவ; மகர தோரணத்தை மறைத்தன - (அனுமன் இருந்த) மகரத்தின் வடிவத்தை அந்தத் தோரண வாயிலை மூடிவிட்டன.

அனுமனால் இறந்த அரக்கர்களின் மிகுதி கூறப்பட்டது. பிணங்கள், மிகுதியாகத் திரண்டிருந்ததனால் தோரண வாயில் மறைந்தது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With fangs curved like the tips of the crescent moon, with mouths like caverns,
  2. with eyes that spat stained blood together with sparks,
  3. with weapons drawn from their sheaths, the fallen bodies
  4. rose to the sky and hid the makara-crowned arch.

What the poem says

The corpses of the demons, with their crescent-shaped fangs, cavernous mouths, bloodshot glaring eyes and drawn weapons, pile up so high that they reach the sky and bury the gateway arch, decorated with makara sea-monsters, on which Aṉumaṉ sits.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṟaik kaṭai eyiṟṟiṉa pilattiṉ vāyiṉa
kaṟaip puṉal poṟikaḷōṭu umiḻum kaṇṇaṉa
uṟai tapu paṭaiyiṉa utirnta yākkaikaḷ
maṟaittaṉa makara tōraṇattai vāṉ uṟa.